வெள்ளி, நவம்பர் 17, 2017

தமிழ் வாழ்க !


கோவை விமான நிலையம் சித்ரா அவினாசி சாலை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த எனது விழிகளில் கண்டதுதான் மேலேயுள்ள புகைப்படத்திலிருக்கும் வாகனத்தின் இலக்கப் பலகை உடன் என் மனம் படபடத்தது காரணம் தமிழ் எண்களில் எழுதியது மனதுக்கு சந்தோஷமளித்தாலும் அந்த எண்கள் எழுதிய முறைகளில் பிழைகள் இருக்கிறது அவரிடம் சொல்ல வேண்டுமே... சொன்னால் ஏற்றுக்கொள்வாரா ? இருப்பினும் பிழை என்றறிந்தும் சொல்லாமல் செல்வது தமிழன்னைக்கு செய்யும் துரோகம் அல்லவா ! ஆகவே விரட்டினேன் அவருடையது ஃபல்சர் என்னுடையது ஸ்கூட்டி அவர் பறந்தார். நானும்தான் இருப்பினும் நான் அபுதாபியில் ஓட்டும் சட்டத்தை இன்னும் கடைப்பிடித்து வருகிறேன் இவரோ சராசரி இந்தியனாய் தொடர்ந்து விடாமல் துறத்தி கொடிசியா, ஹோப் காலேஜ், ஃபன் மால், பீளமேடு, கடந்து வந்தும் அவரைப் பிடிக்க முடியாமல் இனி இந்தியனாய் மாறுவோம் என்று விரட்டினேன் நவஇந்தியா வரும் பொழுது பிடித்து விட்டேன் தலைக்கவசத்தை உயர்த்தியபடியே....
ஸார் இது நீங்களாக எழுதியதா ?
ஆமா..
இதுல பிழை இருக்கு.
வாகனத்தை ஓரங்கட்டி நிறுத்தினார் நானும் நிறுத்தினேன்.
ஸார் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க...
சொல்லுங்க ஸார்
இந்த எண்கள் தமிழில் எழுதி இருக்கீங்க சந்தோஷம் ஆனால் எண்களில் பிழைகள் இருக்கிறது இது சராசரி தமிழ் எழுத்துகள்தான் எண்கள் அல்ல ! இதில் நான்கும், மூன்றும் பிழை மற்றவைகள் சரிதான் இருந்தாலும் எல்லாமே தமிழ் எழுத்து வழியாக எழுதி இருக்கீங்க...
உங்களுக்கு தெரியுமா ஸார் ?
தெரியும்.
சரி எழுதித்தாங்க நான் மாற்றிக் கொள்கிறேன்.
உடன் ஒரு பேப்பரில் ஒன்றிலிருந்து பத்துவரை எழுதிக் கொடுத்தேன்.
ரொம்ப சந்தோஷம் ஸார் எல்லா நண்பர்களிடமும் தமிழ்ப்பற்று உள்ளது போல பேசுவேன் ஆனால் சரியாக தெரியாமல் எழுதியதற்காக வருந்துறேன்.
நான்கூட கோபப்படுவீங்களோன்னு நினைச்சேன் சித்ராவிலிருந்து விரட்டி வர்றேன் ஸார்.
உங்களைப் பார்த்தால் கோபம் வராது பார்த்திருந்தால் நிறுத்தி இருப்பேன்.
பரவாயில்லை.
உங்களை சந்திச்சதில் ரொம்ப சந்தோஷம் ஸார்.
நன்றி மாற்றி எழுதிடுங்க...
நல்லது ஸார் இன்றைக்கே எழுதிடுறேன்.
போலீஸ்காரங்க யாருமே கேட்டதில்லையா ?
யாருக்கு ஸார் இதெல்லாம் தெரியுது ?
நன்றி வர்றேன்.
நன்றி ஸார்.
அதற்கு மேல் பேசுவதற்கு சூழல் சரியில்லை அடுத்த ஸிக்னலில் நிற்கும் பொழுது கிளிக்கினேன். அந்த முகம் அறியாத நண்பர் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்தியனான நான் ஹிந்துஸ்தான் கல்லூரி சாலையில் பறந்தேன்.

நட்பூக்களே சமீபத்தில் வாட்ஸ்-அப் குழுக்களில் பலமுறை தமிழ் எண்களை அறியத் தருகிறேன் என்று தமிழ் எழுத்துகளையே பதிவிட்டு எண்கள் என்று சொல்கின்றார்கள் இது தவறு பொது விடயத்தை அதுவும் நம் தமிழ் மொழியைப்பற்றி பிறருக்கு பொது இடத்தில் சொல்லும் பொழுது அதில் மிகத்தெளிவான பொருளை நாம் முன்வைத்தல் வேண்டும் இதுவே நாம் நமது அடுத்த தலைமுறைக்கு கொடுத்துச் செல்லும் பாடமாகும். இதற்கு மறுப்பு சொல்லி உடனே நானும் வாட்ஸ்-அப்பில் பதில் விளக்கி செல்லிலேயே தமிழ் எண்களை கொடுத்து இருக்கிறேன். ஏற்கனவே இதனைக் குறித்து எனது தளத்தில் பதிவும் எழுதி இருக்கிறேன் இதோ அந்த இணைப்பு தமிழ் எண்கள்


இதுதான் தமிழ் எண்கள் அறிந்து கொள்க – கில்லர்ஜி
௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰
1  2  3  4  5  6  7  8  9  0

காணொளி

புதன், நவம்பர் 15, 2017

நான் இந்திய குடிமகனா ?


மிழகத்தில் தற்போது எங்கு நோக்கினும் ஜாதீய அமைப்புகளை உருவாக்கி மக்களை ஒருக்கிணைக்கின்றோம் என்ற பெயரில் பிரிவினைகளை உருவாக்கி தனது சமூகத்து மக்களை திரட்டிக்காண்பித்து அரசை மிரட்ட வைத்து அதில் ஒரு சிலர் மட்டும் பயன் பெறுகின்றார்கள் நமது சமூகத்துக்கு உயர்வு வேண்டும் நமது சமூகத்து அங்கத்தினர் சட்டமன்றம் செல்லவேண்டும் என்று பொய்யுரைத்து பக்குவமாக தான் நுழைந்து தனது வாழ்க்கையை செம்மை படுத்திக்கொள்கின்றார்கள் இதை முதலில் அனைத்து சமூகத்து பொது மக்களும் உணரவேண்டும் உணராவிடில் இது நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையான விடயமே இதில் இந்த ஜாதிதான் என்றில்லை அனைத்து ஜாதிகளுமே களம் இறங்கி விட்டன நாளை இதன் உள்ளே ஊடகழி ஜாதிக்காரர்களும் ஊடுறுவலாம் மல்லாங்கி ஜாதிக்காரர்களும் மலையை புரட்டலாம். இதற்காக இவர்கள் எடுத்துக்கொள்ளும் பலம் என்ன தெரியுமா ? எல்லா மதத்தினரும், எல்லா ஜாதியினரும் சுதந்திரத்துக்காக பாடுபட்டு இருக்கின்றார்கள் என்பது உலகறிந்த உண்மை தனது ஜாதியில் அன்று கொடி பிடித்தவர் யாரோ அவரின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு அவருக்கு சிலை வடித்து அவரின் பெயரில் அமைப்போ, சங்கமோ உருவாக்கி அதையும் சட்டரீதியாக பதிவு செய்து பிரச்சனையை கையில் எடுத்துக்கொள்கின்றார்கள் இதற்கு அரசு பதிவு என்ற பெயரில் சான்றிதழ் அளித்து அனுமதி கொடுக்கின்றதே அங்குதான் இந்த அரசு மக்களை குழியில் தள்ள வழி வகுத்து விடுகின்றது மற்றொரு விடயம் அந்த தலைவர்களில் சிலர் திரைப்பட நடிகராக மட்டுமே இருந்தவர்களும் உண்டு காரணமென்ன ? தனது ஜாதியில் வேறு யாரும் கிடைக்கவில்லை இதில் இன்னொரு வேடிக்கையான விடயம் என்ன தெரியுமா ? நான் உயர்ந்த ஜாதி என்றும், நான்தான் பலசாலி என்றும் சொல்லிக் கொள்பவர்கள்.

(பலசாலி என்பவன் யார் ? வம்பு சண்டையை இழுத்து ரவுடிசம் செல்பவன் அல்ல  தான் தனது மனைவியோடு செல்கிறான் என்று வைத்துக் கொள்வோம் சில கேடுகெட்ட ஜென்மங்கள் வம்பு இழுக்ககூடும் அந்த இடத்தில் எத்தனை பேர் இருந்தாலும் தான் தோற்போம் என்று தெரிந்தாலும் எதிர்ப்பவனே வீரன்)

எல்லா ஜாதியினருமே நான் உயர்ந்தவன் என்று சொல்கின்றார்கள் சமூகத்தில் காட்டிக்கொள்ள முயல்கின்றார்கள் அதேநேரம் அரசிடம் மனு கொடுக்கின்றார்கள் எங்களை சிறுபான்மையினர் வகுப்பில் சேர்த்து கூடுதல் சலுகை வழங்கு என்று இது கேளிக்கூத்தாக இல்லை. ஜாதீய அமைப்புகளின் பதாகைகளையும், சுவரொட்டிகளையும் காணும் பொழுது நான் மேலும் சிந்தித்தேன் இவர்கள் யார் ? ஆம் இவர் அவரே.. இவர் தியாகிதான், வீரர்தான், இவர் போற்றப்படக்கூடிய மகான்தான் சரி இன்றைய நிலையில் இவரது வாரிசுளும், சந்ததிகளும் தற்போது எங்கே ? ஆழ்ந்து தேடினால் சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டு நலிந்த நிலையில் இருக்கும் இடமறியாத நிலையில் அன்றாடங்காச்சியாக இருக்கின்றார்கள் அவர்களை இந்த சங்கமோ, அமைப்புகளோ தேடிப்பிடித்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த முன் வரவில்லையே ஏன் ? என்றோ மறைந்து போனவர் சுயநலமின்றி பொதுமக்களுக்காக அப்பழுகற்றவராக வாழ்ந்து மறைந்தவர் அவருக்கு சிலை வைத்து கழுவி மரியாதை செய்வதற்கு அவர்களது சந்ததிகளை வாழவைக்கலாமே ! அதனால் பலனில்லை என்பது அறிந்தவர்கள் என்பதை நான் அறிவேன் ஆனால் ஜாதீய அமைப்பை உருவாக்குபவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் மக்கள் தெளிவு பெறவேண்டும் என்பதே எமது எண்ணம் திரு. காமராஜர் தான் முதல்வராக இருந்த நேரத்தில் தனது வயதான தாயார் கழிவறை கட்டுவதற்கு ரூபாய் 3000/ கேட்டு கடிதம் எழுத, அதற்கு காமராஜர் பதில் கடிதம் எழுதுகின்றார்...

///அம்மா என்னிடம் அவ்வளவு வருமானம் இல்லை உன்னைப்போல தமிழகத்தில் பல தாய்மார்களுக்கும் இந்நிலை உண்டு ஆகவே பொறுத்துக் கொள்///

என்று அவரின் குடும்பத்தினருக்கு இன்று கௌரவம் இருக்கின்றதா ? காந்திஜியை போற்றுகின்றோம் அவரது பேரனையே தேர்தலில் தோற்கடித்தார்களே நமது மக்கள் அதற்காக காந்திஜியைப் போலவே அவரது பேரனும் உத்தமர்தான் என்று நான் சொல்ல வருவதாக அர்த்தமல்ல ! அதேநேரம் நகைச்சுவை நடிகர் கருணாஸ் வெற்றி பெற முடிகின்றதே இதை மக்கள் எவ்வகையில் தீர்மானித்தார்கள் இவரை மட்டுமல்ல ! வெற்றி பெற்றவர்களில் அதிக சதவீதம் பேர் வழக்குகளில் உள்ளவர்கள்தானே இப்படி தேர்ந்தெடுப்பது அறிவின் வளர்ச்சியா ? வீழ்ச்சியா ? திரு. கக்கன் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து கௌரவிக்கின்றோம் அதேநேரம் அவரது மகன் மனநலம் குணமடைந்தும் 32 ஆண்டுகளாக கீழ்ப்பாக்கம் மனநிலை மருத்துவமனையில் அழைத்துப்போக உறவின்றி இன்றுவரை அங்கேயே தங்கி இருக்கின்றாரே அவரை யார் நினைத்துப் பார்க்கின்றோம் ? அதிகாரப்பூர்வமான இந்திய குடிமகனானாலும் என்னால் அவரை நினைத்து வருந்த மட்டுமே முடிகின்றது வேறொன்றும் செய்ய முடியவில்லையே என்ற நிலையில் வெட்கப்பட்ட குற்ற உணர்வுடன் பதிவை முடிக்கின்றேன்,

தேவகோட்டை கில்லர்ஜி
காணொளி

திங்கள், நவம்பர் 13, 2017

பசியின் கொடுமை


லகில் 936 Million மக்கள் உணவின்றி தவிக்கின்றனர் தினம் 20864 நபர்கள் உணவு கிடைக்காமல் இறக்கின்றார்கள் இந்நிலைக்கு இன்னும் இந்தியா வரவில்லை என்பதில் பெருமையும், இறைவனுக்கு நன்றியும் சொல்வோம் பசி என்றால் என்னவென்பது பலருக்கும் தெரிவதில்லை காரணமென்ன ? அவர்கள் வளர்ந்த விதம் அப்படி உதாரணம் தமிழக முன்னாள் முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்களுக்கு பசியைப்பற்றி தெரியும் அதேநேரம் அவரது பேரன் திரு. உதயநிதி ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, திரைப்பட இயக்குனர் திரு. T. ராஜேந்தர் அவர்களுக்கு பசியின் கொடுமை தெரியும், அவரது மகன் சிலம்பரசனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை இந்நிலை நம்மில் பலரது குடும்பத்தினருக்கும் உண்டு

நமது குழந்தைகளை பசியின் அருமையை உணர்த்தி வளர்க்க வேண்டும் அப்பொழுதுதான் அவர்கள் பணத்தின் அருமையை, உழைப்பின் தன்மையை உணர்ந்து வளர்வதோடு பிறருக்கும் உதவும் மனப்பான்மையும் வளரும் அவர்களை நல்லவழியில் மட்டுமே பணத்தை செலவு செய்யவைக்கும் பெரும்பாலும் நம்மில் பலர் நமது பிள்ளை கஷ்டப்படக்கூடாது என்று நினைக்கின்றோம் அங்குதான் அவர்களது கேடுகாலம் தொடங்க ஆரம்பிக்கின்றது உதாரணம் ஒரு குறிப்பிட்ட டிகிரிவரை படிக்க வைக்கின்றோம் எப்படியோ பணத்தைக் கொடுத்து நமது திறமையால் ஒரு நல்ல வேலையை வாங்கி கொடுத்து விடுகிறோம் அவர்களது தொடக்க சம்பளமே 40,000/ ரூபாய் என்று வைத்துக் கொள்வோம் அவனுக்கு என்ன தெரியும் அவன் எப்படி ? சிக்கனமாக செலவு செய்ய பழகுவான் அவர்களுக்கு வாழ்வின் சூட்சுமமே விளங்காமல் வாழத்தொடங்கி விடுவார்கள்.

ஒரு மனிதன் அடிமட்ட வாழ்க்கையைத் தொடங்கி வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி சிறுகச் சிறுக முன்னேறி வாழ்வில் உயரத்தை தொடுகின்றார் தனது பிள்ளை கஷ்டப்படவே கூடாது என்று எல்லாமே பார்த்து பார்த்து செய்கின்றார் பிள்ளையோ பணத்தின் அருமை தெரியாமல் எல்லாவற்றையும் செலவு செய்கிறான் இவர் மனம் நொந்தே இறந்தும் விடுகின்றார் நாளை இவனுக்கு வாரிசு உருவாகி பிள்ளையைப் பெற்று தனது தந்தையின் நிலைக்கு கொண்டு வந்து விட்டு இவனது வாழ்க்கையையும் முடித்து விடுகின்றான் பிறகு பேரன் கஷ்டப்பட ஆரம்பிக்கின்றான் இப்படித்தான் சமூகத்தில் பலருடைய இல்லங்களிலும் சந்ததிகளின் வாழ்க்கை சுழன்று கொண்டு இருக்கிறது நான் லட்ச ரூபாயைக்கூட அவசியத்தோடு அலட்சியமாய் செலவு செய்திருக்கின்றேன் சமயங்களில் ஒரு ரூபாயை செலவு செய்ய மறுத்திருக்கின்றேன் காரணம் அவை அவசியமற்றவைகளாக இருக்கும் இதனால் பலரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்து இருக்கின்றார்கள், பேசி இருக்கின்றார்கள் இதனைப்பற்றி எமக்கு கவலையில்லை நான் உழைப்பின் தன்மையை அறிந்தவன் எனது வாழ்க்கையில் நான் முதல் சம்பளம் பெறத்தொடங்கியது வாரச்சம்பளம் ரூபாய் 2.50 ஆகவே எனக்கு பணத்தின் அருமை தெரியும் இப்பொழுதுதானே டீ குடித்தோம் மீண்டும் எதற்கு ? என்று தவிர்த்ததுண்டு இப்பொழுதுதானே தர்மம் செய்தோம் மீண்டும் எதற்கு ? என்று ஒருபோதும் நினைத்ததில்லை இதுவே எனது கொள்கை உழைப்பே உயர்வுக்கு உறுதுணை.

சிறுதுளி பெருவெள்ளம் உணவை மிச்சப்படுத்துவீர் குப்பையில் போடுவதை பிச்சை எடுப்போருக்காவது இடுவீர்

 காணொளி

சனி, நவம்பர் 11, 2017

இது சிரிப்பதற்கு அல்ல !

 இனியாவது திருந்தணும் தலைவர்கள் அல்ல மக்கள்.
 பிரதமர் பதவி நாங்கள் உனக்கு கொடுத்த வேலை.
 நம்ம ஊரில் வார்டு கவுண்சிலர்கூட செய்யமாட்டார்.
 உமக்கு ஒரு சல்யூட் திரு. கெஜ்ரிவால் அவர்களே...
உங்களுக்கும்தான் திரு. ரங்கசாமி அவர்களே... 
 எளிமையானவர்கள் என்றும் சரித்திரத்தில் நிற்பார்கள்.
மனிதனை மனிதனாக மதிக்கத் தெரிந்த மாமனிதர்.
 திரு. மாணிக் சர்க்கார் இவரும் மனிதருள் மாணிக்கமே.
 மாநில முதல்வரின் எளிமையை பாருங்கள்.
 இவர் சம்பாரிக்கவில்லை என்பதற்கு இதுகூட சான்றுதான்.
முதல்வராக ரயில் நிலையத்தில் திரு. அச்சுதானந்தன். 
 தியாகத்துக்கு மரியாதை கொடுப்பது நம்மிடமில்லை.
 முதல்வராக ஸர்ச்சில் இடமில்லாமல் திரு. உம்மன் சாண்டி
முதல்வர்தான் எளிமையின் திருஉருவம்.
வளமையின் பெரு உருவங்கள்.
 
 மண்ணின் மைந்தன் தமிழனுக்கு கிடைக்கவில்லையே...
 வாழ வைத்தவர்களை வாழ்த்தி உறங்க வைப்போம்.
என் இந்தியா வீழ்கிறது என்பதில் பெருமை உடைகிறேன். 
பொம்மலாட்டம் நடக்குது இங்கே புதுமையாக இருக்குது.
பதவி வரும்போது துணிவும் வரவேண்டும் தோழா !
(காலடியை கூர்ந்து காணவும்)

Chivas Regal சிவசம்போ-
மதுரைக்கு வந்த சோதனை போல... இது எம்ஜிஆருக்கு வந்த சோதனையா ?

வியாழன், நவம்பர் 09, 2017

MONEY மண்டபம்


செவாலியே திரு. சிவாஜி கணேசன் அவர்கள் மீது எனக்கு விரோதம் கிடையாது அவர் இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் இதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது மேலும் அவர் பச்சைத்தமிழன் அதில் நாம் அனைவரும் இணைந்தே பெருமை கொள்வோம். அவருக்கு மணி மண்டபம் கட்டுவதற்கு பலரும் பல கருத்துகளை சொல்லி வருகின்றார்கள் அவருடைய ரசிகர்கள் இதற்கு மறுப்பு சொல்வார்களா ? மாட்டார்கள் காரணம் தமிழர்கள் ரசிகர் என்ற வட்டத்துக்குள் தன்னை சிறை படுத்திக்கொண்ட பிறகு திரைப்பட வசனகர்த்தாவின் சுய அறிவில் உதித்ததை தனது தலைவன் வாயசைத்து சொன்னதை வேதவாக்காக நினைக்கிறான். அதனால்தான் அவர்களை முதல்வர் ஆக்கவும் துடிக்கின்றான். பொதுநலத்துக்கு வருபவர்கள் ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டுமென்பது தமிழகத்தைப் பொருத்தவரை அவசியமற்றுப் போய்விட்டது ஆகவே ரசிகர்களுக்கு அவன் நாலு மனைவிகளை திருமணம் செய்து ஏழு நபர்களை வைத்திருந்தாலும் அது தவறாக தோன்றுவதில்லை எல்லாம் சரி எதுவும் சரி இந்த வார்த்தைகள் திரு. சிவாஜி கணேசன் அவர்களை சொல்வதாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் வேறு யார் ? நிறைய நபர்களை சொல்லலாம்.

ஒரு முறை ஆந்திராவில் ஒரு நடிகர் வாய்த்தகராறில் தயாரிப்பாளரை கைத்துப்பாக்கியால் சுட குண்டு அவரில் தோல்பட்டையில் பட்டு மயங்கி விழுந்தார் நடிகரை கைது செய்ய வந்த காவல்துறையினரை கல்லெறிந்து போராட்டம் செய்த ரசிகர்களை கண்டோம் அப்படிப்பட்ட அறிவுஜீவிகளை கொண்டது நமது நாடு இதில் நியாயம், தர்மம் உண்டா ? இறைவனுக்கு பயந்து நீதி நேர்மையோடு வாழ்பவனுக்கு இதில் குற்றம் குறை காணஇயலும் ரசிகனுக்கு ? அவனுக்கு குதிரைக்கு கண்ணை அணைகட்டி ஓட்டி விட்ட நிலைதான் அதைப்போல் இந்த மணி மண்டபத்தால் மக்களுக்கு பலன் உண்டா ? என்று ஆலோசித்து பார்க்க வேண்டும் இதை மக்களின் பணமான அரசு செலவில் செய்வது நியாயமா ? பல கோடிகள் சம்பாரிக்கும் நடிகர்கள் தங்களது சங்கப்பணத்தில் கட்டக்கூடாதா ? அல்லது முடியாதா ? அவ்வளவு ஏன் சமீபத்தில் யாரோவொரு பதிவர் கேட்டது போல அவரது குடும்பத்தினர் தங்களது பணத்தில் கட்டக்கூடாதா ? எவ்வளவு சொத்து சேர்த்து வைத்து சென்றுள்ளார் தனது தந்தை இறந்ததற்கு தலை முடியைக்கூட இழக்க விரும்பாதவர் அவருடைய மகன் பிரபு ஆனால் தமிழ்நாட்டில் பல ஆயிரம் ரசிகர்கள் முடி இறக்கினார்கள் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியது. இவரா மணி மண்டபத்துக்கு பணம் ஒதுக்கப்போகிறார் இந்த மூஞ்சிதான் டிவியில சொல்லுது எல்லோருக்கும் ஐஸ்வர்யம் கிடைக்கணும்னு காலக்கொடுமை.

சிலைகள் அவசியமில்லை என்பது எமது பொதுநலக்கருத்து ஏற்கனவே இதனைக்குறித்து எழுதியும் இருக்கிறேன். நாட்டுக்காக சிறை சென்ற நல்ல உள்ளங்களுக்கு மரியாதை நிமித்தமாக சாலையில் சிலைகள் வைத்து எதைக்கண்டோம் ? அவைகள் இன்று ஜாதிய பிரச்சனையில் வந்து நடுத்தெருவில் சிலைகளை கம்பிகளால் பூட்டி சிறை வைத்து இருக்கிறோம் அவர்களின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகம் இல்லையா ? இனி வரும் காலங்களில் ஜாதிக்கொடுமை இன்னும் தலைவிரித்தாடும் அப்பொழுது எல்லாச் ஜாதிக்காரனும் தனது தலைவனுக்கு சிலை வைக்க சொல்லி நச்சரித்து இடப்பற்றாக்குறை காரணமாக சாலையின் நடுவிலேயே நட்டு வைக்கும் தைரியம் நமது ஜாதி அமைப்புகளுக்கு உருவாகும் இதற்கு நாளை அனைத்து ஜாதிக்காரர்களும் வருவார்கள். அன்று அடிமட்டத்தினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் காரணம் ஒரே கட்சிக்கு நான்கு தலைமைகள் இன்று தலைவர்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெறுகி வருகின்றார்கள் இதன் காரணமாகவே தொண்டர்கள் பற்றாக்குறை வந்து விட்டது. காரைக்குடியில் கவியரசர் திரு. கண்ணதாசன் அவர்களுக்கு மணி மண்டபம் கட்டினார்கள் யார் அங்கு போய் வாழ்வாதாரம் படித்துக் கொள்கிறார்கள் ? கேட்பாரற்று கிடக்கிறது மக்கள் பணம்தானே.... அந்தப்பணத்தை அவர்களின் வாரிசுகளுக்கு கொடுத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தலாமே... ஏன் செய்யவில்லை ? நாளை சிவாஜி மணி மண்டபமும் இதேநிலைதான். எல்லாம் அரசியல்வாதிகள் செய்யும் சுயநல சித்து விளையாட்டு. நாட்டை ஆண்டதற்காக சிலை வைத்தோம் அதன் மூலம் நமக்கு நாமே வாழ்வுக்கு உலை வைத்தோம்.

எனது எதிர்ப்பை திரு. சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணி மண்டபம் கட்டுவதால் மட்டும் எழுதவில்லை நாளை திரு. ஓமக்குச்சி நரசிம்மன் அவர்களுக்கு கட்டினாலும் எழுதுவேன் காரணம் எந்த நடிகனின் வார்த்தைகளும், எந்த அரசியல்வாதியின் செயலும், எந்த கிரிக்கெட்காரனின் ஸிக்சரும் என்னை ஆளுமை படுத்தி விடமுடியாது அவனும் என்னைப் போலவே மனிதனே அவனிடம் என்னைவிட மனிதம் இருந்தால் அவன் மாமனிதன்.

Related Posts Plugin for WordPress, Blogger...